லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில்வெற்றிகரமாகத்திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். தமிழ்சினிமாவில்அறிமுகமாகிமிகக்குறுகிய கால கட்டத்திலேயேகமல், விஜய், போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். பொதுவாக இவர்படத்தில்இரவுகாட்சி, பிரியாணி,ஆக்சன், பழைய பாடல்உள்ளிட்டவற்றைவைத்து தனக்கான ஒருடிரேட்மார்க்கைசெட்செய்துள்ளார். இவரின்முந்தைய படமான கைதி படத்தில் "ஆசை அதிகம்வச்சு..." என்ற பாடலை பயன்படுத்தியிருப்பார். இது ரசிகர்களிடையேநல்லவரவேற்பைப்பெறவே சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும்"சக்குசக்குவத்திக்குச்சி..." என்ற பழைய பாடலை பயன்படுத்தியுள்ளார்.இதுரசிகர்களிடையே நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.
கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் அருண்பாண்டியன், நெப்போலியன்,மன்சூர்அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றசக்குசக்குவத்திக்குச்சிபாடலுக்குமன்சூர்அலிகான்மாஸாகநடனமாடியிருப்பார். இந்த பாடல் தற்போது இணையத்தில்ட்ரெண்டாகிவரும் நிலையில் நடிகர்மன்சூர்அலிகான் மீண்டும்சக்குசக்குவத்திக்குச்சிஎன்ற பாட்டுக்கு நடனமாடி அதனை வெளியிட்டுள்ளார். பாடல் வெளியாகி 27 வருடங்கள் கழித்தும்அதேஎனர்ஜியோடுமன்சூர்அலிகான் நடனமாடியவீடியோ தற்போதுஇணையத்தில்வைரலாகிவருகிறது.