2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இது படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது...
"ஜோதிகா நடிப்பதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும். எப்படி ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். இந்தப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். நானும் கொடுத்துள்ளேன். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். 12 கோடி மக்கள் இதற்கு வலு சேர்க்கிறோம். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்" என்றார்
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/S0JvZ_5-Z58.jpg?itok=Uhlg0gpP","video_url":"