Advertisment

'தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது' - மன்சூர் அலிகான் ஆவேசம்! 

maniyarfamily

Advertisment

mansoor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

'தெரு நாய்கள்' படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ஐ கிரியேஷன்ஸ் படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது 'படித்தவுடன் கிழித்து விடவும்' படம். 'தெரு நாய்கள்' படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது....

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"மோடி அரசு கொண்டு வந்த டி மானிட்டைசேஷனுக்கு முன்பு. தமிழ் சினிமா ,தென் இந்திய சினிமா நல்லா இருந்தது . தற்போது டி மானிட்டைசேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க. அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு, அது இருக்குன்னு சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா, திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம். 8 வழி யார் கேட்டா? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும், அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும்? யாருக்கெல்லாம் பயன்? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல. சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு? சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய்? இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம் எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால், 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய தனியாருக்கு விற்க பார்க்குது . காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும். தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் 'மேக் இன் இண்டியா' திட்டம் என்கிறார்கள். நீ என்ன வெங்காயம் விற்க, மயிர் புடுங்க, ஆட்சி நடத்துகிறாய்? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள்? 5 பைசா பொது மக்களக்கு வந்ததா? சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம் . இது தான் மத்திய அரசின் 'மேக் இன் இண்டியா' திட்டமா? பெரிய பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின் பணம் செல்லாமை அறிவிப்புக்குபின் தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஒடவில்லை? அதற்கு பணத்தை திருப்பி தந்தானா? பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா? பலகோடி புது நோட்டுகள் எப்படி பல பணக்காரன் கையில் கிடைத்தது. இது என்ன நாடா? திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா? ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர். எல்லாம் கமிஷன் தான் காரணம். கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம். காந்தி, காமராஜர் எல்லாம் அன்று பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று இவர்கள் கொரியா, ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்த'படித்தவுடன் கிழி க்கவும்' படம் நாம் இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும், நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக் கூடாது" என ஆவேசமாக பேசினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Mansoor Ali Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe