Advertisment

"ஆவலோடு காத்திருக்கிறேன்" - மனோஜ் பாஜ்பாய்

manoj b Sirf Ek Bandaa Kaafi Hai movie tamil release update

Advertisment

உண்மைசம்பவங்களின் அடிப்படையில்அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’. இதில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இது தொடர்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், “இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையில் உள்ள எனது நண்பர்கள் என அனைவரிடமும் மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சமூக அக்கறையுடன் மிக முக்கியமான விஷயத்தைக் கையாளும் படத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இது அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும் படைப்பு. தென்னிந்தியப் பார்வையாளர்கள் இப்படத்திற்கு எத்தகைய வரவேற்பைத் தருவார்கள் என்பதைக் காண நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

actor manoj bajpayee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe