Advertisment

‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்!

manoj barathiraja

Advertisment

பாரதிராஜா, கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்ளிட்ட மூன்று பேரின் கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த படம் சிகப்பு ரோஜாக்கள். 1978ஆம் ஆண்டு வெளியான இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும், க்ரைம் ஜானர் படங்களின் முன்னோடியாகவும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது 42 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பல தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. மேலும் இதை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாதான் இயக்குகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து பரவிய வதந்திக்கு மனோஜ் பாரதி விளக்கம் அளித்துள்ளார். அதில், “கடந்த சில நாட்களாக 'சிகப்பு ரோஜாக்கள் 2’ படம் குறித்து வெளியாகிக்கொண்டு இருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஒருவேளை இந்த படத்தை உருவாக்குவதாக இருந்தால் அதை நானும் எனது தந்தை பாரதிராஜா அவர்களும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

barathiraja manoj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe