நடிகர் விஜய்யுடன் மனோபாலா திடீர் சந்திப்பு! 

Manobala's surprise meeting with actor Vijay!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும்பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும்'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடலின்அப்டேட் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலாநடிகர் விஜய்யை இன்று திடீரென்று சந்தித்துப் பேசினார். இது குறித்து மனோபாலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்"வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யைசந்தித்தேன். அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும்போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்குக் கொடுத்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

varisu
இதையும் படியுங்கள்
Subscribe