manobala passed away

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராகத்திகழ்ந்தவர் மனோபாலா. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத்தனது திரைப் பயணத்தைத்தொடங்கிய மனோபாலா, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

மேலும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதிய வார்ப்புகள்' மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். பின்பு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 1982 ஆம் ஆண்டு 'ஆகாய கங்கை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழைத்தாண்டி இந்தி மற்றும் கன்னடத்தில் தலா 1 படங்கள் இயக்கி மொத்தம் 24 படங்கள் இயக்கியுள்ளார்.

அ.வினோத் இயக்கத்தில் முதல் படமாக வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு 'பாம்பு சட்டை', 'சதுரங்க வேட்டை 2' உள்ளிட்ட படங்களைத்தயாரித்தார். இதில் 'சதுரங்க வேட்டை 2’ இன்னும் வெளியாகவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் உடல்நலக்குறைவால் 69வது வயதில் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானார். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.