/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/119_24.jpg)
பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக தங்களது இரங்கலைத்தெரிவித்தனர். மேலும் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர் அவரது வீட்டில் இருந்து தொடங்கி வளசரவாக்கத்திற்கு ஊர்வலமாக மனோபாலாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள், ரசிகர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)