பின்னணி பாடகரும், நடிகருமான மனோவின் மகன் துருவன் மனோ நாயகனாக அறிமுகமாகும் படம் ‘வட்டக்கானல்’. இப்படத்தை பிதக் புகழேந்தி இயக்கியுள்ளார். மேலும் மீனாட்சி கோவிந்தராஜன், ஆர். கே. சுரேஷ் , வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.பி.ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கைலைன் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ. மதியழகன் மற்றும் எம். வீரம்மாள் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாரிஸ் விஜய் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாடகர் மனோ, “என் அண்ணன் எஸ்.பி.பி. மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒரு முறை என்னுடைய பசங்களின் சினிமா ஆர்வத்தை பற்றி சொல்ல்க்கொண்டிருந்தேன். ஒரு பையன் படம் பண்ண ஆசைப்படுறான்னும் இன்னொரு பையன் பாடகராக ஆசைப்படுறான்னும் சொன்னேன். அதுக்கு அவர், டேய் நம்ம ஆசைப்படுறது எல்லாம் நமக்கு நடந்தா நம்ம தான் கடவுள், நம்மகிட்ட என்னென்ன இருக்கோ அத வச்சு பசங்க முன்னேற வழி பன்னு.
அதுக்கு எடுத்துகாட்டா என்னையே எடுத்துகோ, என் மகன் படம் தயாரிச்சு நஷ்டம் ஆனதால அந்த கடனுக்கு நான் பாட்டு பாடி வட்டி அடைச்சேன். அதனால அப்படி நீ போய்டாத, ஏன்னா நம்ம ஒவ்வொரு படியா கஷ்டப்பட்டு 45 வருஷம் ட்ராவல் பண்ணி வந்திருக்கோம். ஒரு பாட்டை நீ பாடினா தான் காசு. உனக்கு சலி பிடிச்சுருக்குன்னு உன் பையன பாட சொன்னா ஒத்துக்க மாட்டாங்க. அதனால் ஒரு பாடகனுடைய காசு மதிப்புக்க மிக்க ஒன்னுன்னு சொன்னார். அதை இந்த தருணத்துல சொல்லனும்னு தோனுச்சு” என்றார்.