Advertisment

"பழசெல்லாம் தூக்கி வீச கேட்குதா என் பாச" - ‘மாமன்னன்’ லிரிக் வீடியோ

Manna Maamanna Lyric video

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும், தமிழ் ராப் பாடகருமான தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார். “கேக்குதா என் பாச... எனக்குள்ளே ஒரு ஓச” எனத் தொடங்கும் இப்பாடலைஅவரேஎழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி வந்த படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக்கல் வீடியோவுமே வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் படம் வெளியான பிறகே தெரிய வரும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

mariselvaraj Udhayanidhi Stalin therukural arivu maamannan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe