யுவன் ரசிகர்களுக்கு இன்று  டபுள் ட்ரீட்...

கடந்த 1996ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் தான் இவர். இவருடைய பலமே மெலடியில் இளைஞர்களை கவர்வதும், தன்னுடைய பின்னணி இசையினால் மாஸாக இளைஞர்களின் நாயகனாவதும்தான். யுவன்சங்கர் ராஜாவுக்கு என்றே தனி ரசிகர்களை வைத்திருக்கிறார் என்பதுதான் அவருடைய சிறப்பு. ஹீரோக்களுக்கு இருப்பதுபோலவே வெறித்தனமான ரசிகர்கள். அதிலும் குறிப்பாக அஜித்தின் ரசிகர்களாக இருப்பவர்களிடம் உங்களுக்கு பிடித்த இசை கலைஞர் யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் யுவன் என்று சொல்லுவார்கள். இதுபோல பல ஹீரோக்களை பிடித்திருந்தாலும் யுவனுக்கு என்று ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் உண்டு.

mankatha 8 year celebration

யுவனின் ரசிகர்களுக்கு இன்று இரு கொண்டாட்டம் என்றே சொல்லலாம். ஆமாம், யுவனின் பிறந்தநாளான இதே தேதியில்தான் அஜித் யுவன் கூட்டணியில் கடந்த 2011ஆம் ஆண்டு மங்காத்தா என்ற மாஸ் ஹிட் படம் வெளியானது. இதில் யுவனின் தீம் மியூசிக் இன்றுவரை பலரது ஃபேவரைட்.

இன்று இப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடுகின்றனர். அதேபோல யுவனின் பிறந்தநாளையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ACTOR AJITHKUMAR mangatha yuvanshankarraja
இதையும் படியுங்கள்
Subscribe