mankatha 2 update out now

கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி வினய், மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் 50 வது படமாக வெளியான 'மங்காத்தா' படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. மேலும் அஜித்தின் சினிமா கேரியரில் முக்கிய படமாக கருதப்படும் 'மங்காத்தா' படத்தை அவரது ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். பொதுவாக ஒரு படம் ஹிட்டடித்தால்அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிரிபார்ப்புஅதிகரிக்கும் . அந்தவகையில் 'மங்காத்தா' படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மூலம் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத்தொடர்ந்து 'மங்காத்தா 2' படம் உருவாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் சமீபத்திய நிகழ்வில்பேசிய வெங்கட் பிரபு 'மங்காத்தா 2' குறித்தபுதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப்படி 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் முதல் பக்கத்தை விட சிறப்பான கதையை தயார் செய்துவைத்துள்ளேன். விரைவில் 'மங்காத்தா 2' உருவாகும். அதற்கான கதையைஅஜித்திடம் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment