manjummel boys deepak thanked tamil fans

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை முக்கியமான இடத்தில் படக்குழு பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிடத்திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் 100 கோடி எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனத்தெரிவித்துள்ளார் இயக்குநர் சிதம்பரம்.

Advertisment

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிடோர் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டினர்.இந்த நிலையில் இப்படத்தில் ‘சுதீஷ்’ என்றகதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக், படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலமாகத்தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு தீபக் தொடங்கினார். அதன் பிறகு, ‘தட்டத்தின் மறையத்து’, ‘தீரா’, ‘ரேக்ஷாதிகாரி பைஜு’, ‘கேப்டன்’ மற்றும் ‘கண்ணூர் ஸ்குவாட்’ போன்ற பல ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது சமீபத்திய வெளியீடான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருப்பேன் எனத் தேர்வு செய்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தீபக். மேலும்,இயக்குநருக்கும் பார்வையாளர்களுக்கும்குறிப்பாகத்தமிழ் பார்வையாளர்களுக்கும்தனது நடிப்பை ஆதரித்து பாராட்டுவதற்குத்தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.