Skip to main content

டூவீலர் லைசென்ஸ் வாங்கிய மஞ்சு வாரியர்; அஜித் கூட போன பைக் ட்ரிப் எப்படி?

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

 Manju Warrior, which has just acquired a two-wheeler license; How about the bike trip with Ajith?

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டார். பிறகு விவாகரத்து போன்ற பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

 

தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார். அந்தக் கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. பிறகு அஜித்குமாருடன் துணிவு திரைப்படத்தில் நடித்தார். மேலும் பல மொழிப்படங்களில் நடிப்பதையும் பாடுவதையும் தொடர்ந்து வருகிறார்.

 

இவர்  கேரளா கொச்சி பகுதியில் உள்ள காக்காநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ-விடம் பைக் ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார். அப்போது மஞ்சு வாரியாரை அடையாளம் கண்டுகொண்ட அங்கிருந்த லைசென்ஸ் வழங்கும் அதிகாரிகள் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இப்போதுதான் லைசென்ஸே வாங்குகிறார் என்றால், அஜித் உடன் இமயமலைப் பகுதிகளில் எல்லாம் பைக்கில் பயணம் செய்ததாகப் படம் வெளியிட்டிருந்தாரே? ஒருவேளை பின்னே உட்கார்ந்து போயிருப்பாரோ அல்லது அங்கெல்லாம் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிவிட்டு இப்போதுதான் உண்மையாக லைசென்ஸ் வாங்குகிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்ரோஷமும்... அன்பும்... - வெளியான விடுதலை 2 அப்டேட்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vetrimaaran soori vijay sethupathi viduthalai 2 first look released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.   


இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒன்றில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெறுகிறார். கதை நாயகனான சூரி இரண்டு போஸ்டரிலும் இடம் பெறவில்லை. முன்னதாக சூரியை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் பெறும் என வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.