Advertisment

"எனக்கு வந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்" - 23 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பட வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்

Manju Warrier missed a Tamil film opportunity 13 years which plays Aishwarya Rai in Kandukondain Kandukondain

Advertisment

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர்தமிழில் அசுரன் படத்தில் மூலம் அறிமுகமாகி தமிழிலும் பிரபலமானார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ் மொழியைத்தொடர்ந்து தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பதைத்தாண்டி பாடகியாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், தான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கூறுகையில், "அசுரன் படம் முன்பே பல படங்களில் நடிக்கவாய்ப்பு வந்தது. ஆனால் அப்போதுபல மலையாள படங்களில் ஒப்பந்தமாகியிருந்தேன். அதனால் நடிக்க முடியாமல் போக பல தமிழ் படங்களின்வாய்ப்பைதவறவிட்டேன். அப்படி தவறவிட்ட படங்களில்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படமும்ஒன்று. அந்த படத்தில்ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குநர் ராஜீவ் மேனன் அழைத்தார். பின்பு என்னால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு போனது." என தெரிவித்துள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் 2000 ஆம் ஆண்டு வெளியானது. அதில் மம்மூட்டி, அஜித்குமார், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்போது அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மஞ்சு வாரியர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தால் 23 ஆண்டுகளுக்குமுன்னரேஅஜித் படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR manju warrier
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe