Skip to main content

மஞ்சு வாரியர் பாடலுக்கு பிரபு தேவா நடனம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

manju warrier Kannilu Kannilu lyric video goes viral

 

'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 'துணிவு' படத்தில் நடிக்கிறார். இதனிடையே மஞ்சு வாரியர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஆயிஷா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்குகிறார். இப்படத்தை  கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் சார்பாக ஜக்காரியா தயாரிக்கிறார்.  

 

இந்நிலையில்  'ஆயிஷா' படத்தின் கண்ணிலு கண்ணிலு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஜெயச்சந்திரன் இசையில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் பிரபல நடிகர்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
prabhu deva stper hero movie minman

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நடனத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. ஆனால் சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபு தேவா. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் பிரபு தேவா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி கோட் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. 

prabhu deva stper hero movie minman

இந்த நிலையில் பிரபு தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை அறிவித்துள்ளது ஒரு படக்குழு. மின்மேன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கிறார். கதை மற்றும் இயக்கத்தை பிரவீன் மற்றும் சதீஷ் என்பவர்கள் கவனிக்க, வசனம் மற்றும் திரைக்கதையை மதன் கார்கி கவனிக்கிறார். வினோத் செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு கஷ்யப் இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.