மீண்டும் முன்னணி நடிகர் படத்தில் மஞ்சு வாரியர்

manju warrier joins arya mr x movie

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். திபு நிபுணன் தாமஸ் என்பவர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் அசுரன் படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களைஅடுத்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகும் நிலையில் இன்று பூஜை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தைதமிழ், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கௌதம் கார்த்திக் கடைசியாக 'ஆகஸ்ட் 16 1947' படத்தில் நடித்திருந்தார். ஆர்யா 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.

Actor Arya gautham karthick manju warrier
இதையும் படியுங்கள்
Subscribe