Advertisment

இந்தியில் தடம் பதிக்கும் தனுஷ் பட நடிகை!

manju warrier

Advertisment

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான 'தி ப்ரீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'மாராக்கர்', 'ஜாக் அண்ட் ஜில்', 'காயட்டம்', '9 எம்.எம்' உள்ளிட்ட பல மலையாளப் படங்களைக் கைவசம் வைத்துள்ள மஞ்சு வாரியார், தற்போது இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் 'அமெரிகி பண்டிட்' படத்தில் மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது போபாலில் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.

manju warrier
இதையும் படியுங்கள்
Subscribe