Published on 30/01/2019 | Edited on 30/01/2019

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'அசுரன்' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளார்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.