Advertisment

டேக் டைவர்சன்; அஜித்தின் ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் மஞ்சு வாரியர்

Manju Warrier bought a new BMW bike

மலையாளத்திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் மூலம் அறிமுகமாகி தமிழிலும் பிரபலமானார். மலையாளம், தமிழ் மொழியைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் மஞ்சு வாரியர், நடிப்பதைத் தாண்டி பாடகியாகவும் வலம் வருகிறார்.

Advertisment

இதனிடையே அசுரன் படத்தைத்தொடர்ந்து தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்துஇப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதிக பார்வையாளர்களைக் கொண்டு அதிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் ஓய்வு நேரங்களில் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்ட அஜித்துடன் மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்தார். அதன் பின்பு கடந்த மாதம் டூவீலர் லைசென்ஸ் பெற்றார்.

Advertisment

இந்த நிலையில் புதிய பிஎம்டபிள்யூ பைக்கை வாங்கியுள்ளார் மஞ்சு வாரியர். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த அவர், "ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் பல தூரம் செல்ல வேண்டும். அது கிடைத்துவிட்டது. அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால்தயவுசெய்து என்னுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருக்கும் அஜித்திற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR AJITHKUMAR bmw manju warrier
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe