Skip to main content

டேக் டைவர்சன்; அஜித்தின் ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் மஞ்சு வாரியர்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Manju Warrier bought a new BMW bike

 

மலையாளத் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் மூலம்  அறிமுகமாகி தமிழிலும் பிரபலமானார். மலையாளம், தமிழ் மொழியைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் மஞ்சு வாரியர், நடிப்பதைத் தாண்டி பாடகியாகவும் வலம் வருகிறார்.

 

இதனிடையே அசுரன் படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதிக பார்வையாளர்களைக் கொண்டு அதிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் ஓய்வு நேரங்களில் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்ட அஜித்துடன் மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்தார். அதன் பின்பு கடந்த மாதம் டூவீலர் லைசென்ஸ் பெற்றார். 

 

இந்த நிலையில் புதிய பிஎம்டபிள்யூ பைக்கை வாங்கியுள்ளார் மஞ்சு வாரியர். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த அவர், "ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் பல தூரம் செல்ல வேண்டும். அது கிடைத்துவிட்டது. அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால் தயவுசெய்து என்னுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருக்கும் அஜித்திற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருப்பதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Darshan of Ajith Sami in Tirupati Temple!

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி’படத்தில் நடித்து வருகிறர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முதற்கட்ட படபிடிப்பு முடிவடையும் நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு இன்னும் சில வாரங்கள் கழித்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய அஜித் வெளிநாடு செல்லவுள்ளார். விடாமுயற்சியின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதம் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. இந்த நிலையில் தான் வெளிநாடு செல்லும் முன்பு திருப்பதி கோவிலுக்குச் சென்று நடிகர் அஜித்குமார் சாமிதரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்த அஜித், சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார். 

Next Story

சிரஞ்சீவியை சந்தித்த அஜித் - புகைப்படம் வைரல் 

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
ajith mets chiranjeevi

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.   

இப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட்டான நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் உருவாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் பொங்கல் 2025இல் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் அஜித்குமார் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். குட், பேட், அக்லி படத்தின் படப்பிடிப்பும், சிரஞ்சீவி நடிக்கும் 'விஷ்வாம்பரா' படப்பிடிப்பும் ஒரே இடத்தில் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிரஞ்சீவி பட படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'விஷ்வாம்பரா' படத்தை இயக்குநர் வசிஷ்டா இயக்க சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் போலா சங்கர். அப்படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமெக் என்பது குறிப்பிடதக்கது.