style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
'வடசென்னை' படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக 'அசுரன்' படத்தை இயக்கவுள்ளார். தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இது மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.