''இதற்கு முன்பு 33% இட ஒதுக்கீடு சரியாக பராமரிக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை'' - மனிஷா யாதவ்

hfhf

கரோனா அச்சுறுத்தலால் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அனைத்து நகரங்களிலும் உள்ளமதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சில இடங்களில் மக்கள் வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கிய நிலையில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு நடிகை மனிஷா யாதவ் சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...

''இதற்கு முன்பு 33% (பெண்கள்) ஒதுக்கீடு சரியாக பராமரிக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு இது குறைந்தபட்சம் பயன்படுத்தப்படுவது போல் தெரிகிறது. மதுபானக் கடைகளுக்கு வெளியே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரிசைகளில்காணப்படுகின்றனர்'' என பதிவிட்டுள்ளார்.

manisha yadav TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe