Advertisment

மனிஷா யாதவ்வுடன் இணையும் யோகிபாபு

manisha yadav

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'சண்டிமுனி' படத்தில் நாயகனாக நட்ராஜ், நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, கிரேன் மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ராகவா லாரன்ஸிடம் காஞ்சனா 2 படத்தில் உதவியாளராக பணியாற்றிய மில்கா.எஸ்.செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் பேசும்போது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகுகிறது. ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம் படத்தின் சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும். நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி. ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும்" என்றார்.

yogibabu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe