maniratnam speech in vaazhai pre release event

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், ராம், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல இயக்குநர்களும் த்ருவ் விக்ரம், அனுபமா பரமேசுவரன், உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர். மேலும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் காணொளி வாயிலாக படத்தை பாராட்டி பேசினர்.

அந்த வகையில் மணிரத்னம் காணொளி வாயிலாக பேசுகையில், “தமிழ் சினிமாவில் நிச்சயமாக ஒரு வலுவான குரல். மாரி செல்வராஜ் முந்தைய படங்களைப் போல் இந்த படத்திலும் ஒரு அனுபவமிக்க மேக்கிங், எல்லா துறைகளையும் கையாண்ட விதம் சிறப்பாக உள்ளது. அவரை நினைத்து பெருமை படுகிறேன். படத்தில் வரும் கிராம மக்களை எப்படி நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். ரொம்ப பொறாமையாக இருக்கிறது. அது மாரி செல்வராஜின் தனித் திறமை என நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.