மணிரத்னம் தயாரிப்பில் உருவான‘வானம் கொட்டட்டும்’ டீஸர் வெளியீடு...

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை படைவீரன் என்னும் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னமும், தனாவும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.

sarathkumar

குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக உருமாறி வரும் சித் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ட்விட்டரில் இப்படத்தின் டீஸர் வெளியிட்டுள்ளார் தனுஷ். மேலும் டீஸரில் இப்படம் ஃபிப்ரவ்சரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/_VAEJz8_jSg.jpg?itok=w_bNQkld","video_url":" Video (Responsive, autoplaying)."]}

actor Sarath Kumar vanam kottatum
இதையும் படியுங்கள்
Subscribe