maniratnam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விக்ரம் பிரபு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள 'துப்பாக்கி முனை' படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் 'துப்பாக்கி முனை' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த டீசரை பார்த்த இயக்குனர் மணிரத்னம் விக்ரம் பிரபு மற்றும் படக்குழுவை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் அலைபாயுதே படத்திற்கு கதை எழுதிய ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் உதவி இயக்குனரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.வி முத்துகணேஷ் இசையமைதுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.