Advertisment

மீண்டும் இணையும் 'ராவணன்' கூட்டணி

maniratnam next to direct abhishek aishwarya rai

Advertisment

மணிரத்னம் தற்போது கமலை வைத்து தக் லைஃப் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மணிரத்னம் புதிதாக இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கத்தில் அபிஷே பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி இந்தியில் உருவான குரு மற்றும் ராவன் படத்தில் நடித்துள்ளது. இதில் குரு படம் தமிழ் டப்பிங்கில் வெளியிடப்பட்டது. ராவன், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகக்கப்பட்டு, ராவணன் என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. தமிழ் பதிப்பில் விக்ரமும் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சனும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் உறுதியாகும் பட்சத்தில் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவார்கள். சமீபகாலமாக அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இந்த சூழலில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது, சினிமா வட்டாரங்களில் கவனிக்கப்படும் தகவலாக பார்க்கப்படுகிறது. புதுப் படம் தொடர்பாக மணிரத்னம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் உருவாகும் பட்சத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் எனத் தெரிகிறது.

maniratnam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe