Advertisment

நடிக்க வேண்டாம் என்று சொன்ன குஷ்பு... கலாய்த்த இயக்குனர் மணிரத்னம்! 

அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவடைந்ததையொட்டி இயக்குனர் மணிரத்னம் தனது மனைவியின் சமூக வலைத்தளத்தின் வாயிலாகரசிகர்களுடன் 'லைவ்'வாக கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலானது சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடிக்க, பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம்.

Advertisment

mani with kushboo

இந்த கலந்துரையாடலின்போது ரசிகர் ஒருவர், "உங்களுக்கு நடிக்க விருப்பம்இல்லையா? உங்கள் நண்பர்கள் யாரும் நடிக்க உங்களைஅழைக்கவில்லையா? என்று கேட்க, அதற்குள்ளாக நடிகை குஷ்புநேரலையில் வந்தார். உடனடியாககுஷ்பு, "வேண்டாம்" என்று மறுபடியும் மறுபடியும் தெரிவித்து அலற, உடனே மணிரத்னம், "பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றுதான் நான் நடிக்கவில்லை" என்றார்.

வேண்டாம் என்று கூறியதற்கு விளக்கம் அளித்தகுஷ்பு, "இல்லை, ஏற்கனவே உங்கள் படங்களைப் பார்த்து எங்களுக்குத் தூக்கம் வருவதில்லை. நீங்கள் நடிக்கவும் ஆரம்பித்தால் அவ்வளவுதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேச மணிரத்னம் அதையே நையாண்டியாக மாற்றி, இதனால்தான் நடிக்கவில்லை என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

Advertisment

http://onelink.to/nknapp

மேலும் குஷ்பு தன் இளைய மகளைஇயக்குனர் மணிரத்னத்திடம் அறிமுகம் செய்தார். அப்போது குஷ்புவின் மகன் சந்தோஷத்தில் கண் கலங்கினார். உடனடியாக மணிரத்னம், "நான்உங்களை என்ன செய்தேன் என்று அழுகுறீர்கள்" என்று கேட்டார்.

kushboo maniratnam
இதையும் படியுங்கள்
Subscribe