செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

maniratnam

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, அமலாபால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் நடிக்கவுள்ளவர்கள் அனைவரையும் பெரிதாக முடி வளர்க்கச் சொல்லியுள்ளார் மணிரத்னம். மேலும், பிரதான கதாபாத்திரங்களுக்குக் குதிரை பயிற்சி, வாள் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

நீண்ட நாட்களாக இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் டிசம்பர் மாதம் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. 100 நாட்கள் ஒரே கட்டமாக இந்த படத்தை ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.

இந்நிலையில் தாய்லாந்தில் ஸ்டண்ட் கோரியகிராஃபர் ஷாம் கவுசலுடன் மணிரத்னம் படகில் பயணிப்பது மற்றும் காட்டில் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தி திரையுலகில் உருவான அசோகா வரலாற்றுப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துப் பிரபலமானவர் ஷாம் கவுசல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சில காட்சிகல் இந்தோனேசியாவிலும் எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment