Skip to main content

சிறுபான்மையினருக்கு ஆதரவாக மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்காக திரைத்துறை. வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
 

maniratnam

 

 

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ஏற்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் இசுலாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம். 
 

2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில்  கிட்டத்தட்ட 254 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மதங்களின் பெயரால் குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 840 குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக மட்டுமே பதிவாகியுள்ளன என்று என்சிஆர்பி தகவலை அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை எழுதியது வேறுயாரும் இல்லை, பாலிவுட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். 
 

மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் 49 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என  அனைவரும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பட்டியலில்  மணிரத்தனம், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் போன்ற பெரிய பெயர்கள் உள்ளன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.