"பாட்டும்...ரத்தமும்...போர்க்களமும்.." - வெளியானது 'பொன்னியின் செல்வன்' டீசர்

manirathnam 'ponniyin selvan' teaser released

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இதனிடையே சமீபத்தில் வெளியான இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், இந்தியில் அமிதாப் பச்சனும் வெளியிட்டுள்ளனர். அதேபோல், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் ரக்சி ஷெட்டியும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டீசரில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் டீசரில் வரும் போர் வரும் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக உள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

jayam ravi manirathnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe