Advertisment

'பொன்னியின் செல்வன்' ; ஐஸ்வர்யா ராயின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

manirathnam 'Ponniyin Selvan' ; Aishwarya Rai's First Look Released

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம் மற்றும் கார்த்தியின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி 'நந்தினி' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் மற்றும்படக்குழுவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, "பழிவாங்கும் முகம் அழகானது. பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்" என குறிப்பிட்டு போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.

Advertisment

ponniyin selvan manirathnam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe