Advertisment

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் லுக்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

manirathnam 'ponniyin selvan 1'- kaarthi look shared by drums siva mani

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பின்னணி இசைப் பணிகளில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், "ஏ.ஆர் ரஹ்மானின் 'ஏஎம் ஸ்டுடியோவில்' பொன்னியின் செல்வன் படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை மேற்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் கார்த்தி கதாபாத்திரத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் 'பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் லுக் இதுதான்' என கமெண்ட் செய்து இந்த வீடியோவை சமுக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisment

drums sivamani actor karthi manirathnam ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe