மணிரத்னம் எடுத்த முயற்சி... விலகிய பிரபல இயக்குனர்!

Mani Ratnam

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் முயற்சியில் உருவாகவுள்ள படம் 'நவரசா'. ஆந்தாலஜி வகையில் இப்படத்தை 9 இயக்குனர்கள் இயக்கவுள்ளனர். கரோனா பாதிப்பால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் திரையுலகிற்கு நிதி திரட்டும் முயற்சியில் இப்படமானது எடுக்கப்பட்டவுள்ளது. இயக்குனர் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், ஒன்பது இயக்குனர்களில் ஒருவராக இருந்த ஹலீதா ஷமீம் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக இயக்குனர் சர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹலீதா ஷமீம் இயக்கி வரும் ‘ஏலே’ மற்றும் ‘மின்மினி’ ஆகிய படத்தின் பணிகளைத் தொடர வேண்டியுள்ளதால் அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

manirathnam
இதையும் படியுங்கள்
Subscribe