Advertisment

"நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி.." - கரோனா குறித்து மணிமேகலை உருக்கம்!

கரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளர் மணிமேகலை வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், " எல்லாருக்கும் வணக்கம். இப்ப 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க. இது அனைவருக்கும் கஷ்டமான ஒன்றுதான். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டப்படுவார்கள். எனக்கும் அந்த கஷ்டம் இருக்கு. ஷோக்களில் பங்கேற்றால்தால் வருமானம். அந்த வகையில் அனைவரும் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திப்போம். இந்த 144 தடை உத்தரவு எதற்காக போட்டுள்ளார்கள் என்பதை தயவு செய்து அனைவரும் உணர வேண்டும்.

Advertisment

ர

கரோனா வைரஸ் தொடர்பாக மருந்து இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை. அதற்கான ஆய்வு ஒருபக்கம் நடைபெற்று வருகின்றது. இப்போதைக்கு நம்முடைய கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே மருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதுதான். அது நம்முடைய கைகளில் தான் இருக்கின்றது. வீட்டை விட்டு வெளியே போகாமல்இருப்பதுதான் அந்த நோய் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இருக்கும் ஒரே வழி. கன்ரோல் நம்முடைய கையில்இருக்கும் போதே நம்மை காப்பாற்ற முயற்சி எடுப்பதுதான் புத்திசாலித்தனம்" என்று அந்த வீடியோவில் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe