Advertisment

பத்மாவத் போல் மணிகர்ணிகாவுக்கும் எதிர்ப்பு

padma

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், இணைந்து நடித்த 'பத்மாவத்' படத்திற்கு கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். பின்னர் தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு, பஸ்கள் எரிப்பு, கல்வீச்சு என்று வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதையெல்லாம் மீறி இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பத்மாவத் படத்தைப்போல் கங்கனா ரணாவத் நடித்துள்ளமணிகர்னிகாஎன்ற படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் வாள் சண்டை பயிற்சிகள் எடுத்து கங்கனா ரணாவத் நடித்துள்ளார். முகலாய மன்னருக்கு எதிராக பானிபட் போரில் 3 முறை போரிட்ட மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் 'மணிகர்னிகா' படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் விடுதலைப் போரில் அவருக்கிருந்த பங்களிப்பையும் காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் வீரமங்கை ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாகவும் சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. மேலும் ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் பத்மாவத் படத்துக்கு நேர்ந்த கதிதான் மணிகர்னிகா படத்துக்கும் ஏற்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இந்தி பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த எதிர்ப்பு காரணமாக கங்கனா ரணாவத் மற்றும் பட குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe