manikandan lover movie ott update

மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம் லவ்வர். இப்படத்தில் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிண்டு பாண்டு மற்றும் அருணாசலேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம், தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை குறித்து பேசியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 27முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.