Advertisment

விக்ரமுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி? - வெற்றிப்பட இயக்குநரின் அடுத்த பட அப்டேட்

manikandan directing vikram and vijay sethupathi joining new film

'காக்க முட்டை' படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ,'கடைசி விவசாயி' என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தோடு, திரை விமர்சகர்களாலும் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்நிலையில், மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரமும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor vijay sethupathi actor vikram manikandan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe