விஷால் வெங்கட் இயக்கத்தில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாம்’. இப்படத்தில் அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட், நாசர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் வசனகர்த்தா மற்றும் நடிகர் மணிகண்டன் கலந்து கொண்டார். 
 
நிகழ்வில் அவர் பேசியதாவது, “இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் எனக்கு நண்பர்கள் தான். அவர்கள் எல்லாருமே ஆரம்பக்கட்டத்தில் இருந்து இப்போது இந்த மேடைக்கு வரும் வரை எந்தளவு பயணித்திருக்கிறார்கள் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்” எனக் குறிப்பிட்டு ஒவ்வொருவர் பற்றியும் கூறி மகிழ்ந்தார். அப்போது அர்ஜுன் தாஸ் பற்றி கூறுகையில், “கைதி படத்தில் தான் அவரை முதலில் பார்த்தேன். அந்த படம் தெலுங்கில் டப் ஆன போது, அர்ஜூன் தாஸ் ரோலுக்கு வாய்ஸ் கொடுக்க ஆசைப்பட்டேன். என்னுடைய நண்பன் அந்த படத்தின் எழுத்தாளர் என்பதால் அவனிடம் வாய்ப்பு கேட்டேன். அதற்கு அவன், முதலில் வாய்ஸ் ஸ்ட்ரெட்ச் கொடு என்றான். நானும் நிறைய முயற்சித்து பார்த்தேன். அவருடைய குரலை ரீச் பண்ண முடியவில்லை. அப்புறம் நான் தோற்று போய்ட்டேன் என நண்பனிடம் ஒத்து கொண்டேன். 

Advertisment

ஒரு நடிகராக ஒரு கேரக்டரை செய்வதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். அது எப்படி அர்ஜூன் தாஸுக்கு முதல் படத்துலே வந்தது என ஆச்சரியமாக இருந்தது. அதையே தான் அவர் தொடர்சியாக செய்து வருவதால் அவரை ஒரு கட்டத்துக்குள் அடைத்த பிறகு அதை உடைத்து வெளியில் வந்து வேறொன்று ட்ரை பண்ணுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அவர் அதை தொடர வாழ்த்துக்கள்” என்றார்.

Advertisment