Advertisment

‘செவ்வாய்க்கிழமை’ - கவனம் பெரும் பாயல் ராஜ்புத்தின் போஸ்டர்

mangalavaaram actress payal rajput first look poster viral

Advertisment

தெலுங்கில் ‘RX 100’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி, தற்போது 'செவ்வாய்க்கிழமை' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை பாயல் ராஜ்புத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து தயாரிப்பாளராக, இயக்குநர் அஜய் அறிமுகமாகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

இந்த நிலையில் பாயல் ராஜ்புத் நடிக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஷைலஜா’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து இயக்குநர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, “செவ்வாய்க்கிழமை திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர் படம். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது" என்றார்.

தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசுகையில், "RX 100 படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் 'செவ்வாய்க்கிழமை' ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 'காந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

Advertisment

Actress first look
இதையும் படியுங்கள்
Subscribe