Advertisment

சிம்பு பட நடிகையின் கணவர் திடீர் மரணம்!

vdvzdvzv

கிரிக்கெட் வர்ணனை மற்றும் சிம்புவின் ‘மன்மதன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஹிந்தி நடிகை மந்திரா பேடி. இவரது கணவரான ராஜ் கவுஷல் இன்று (30.06.2021) திடீரென காலமானார். இவருக்கு வயது 49. தயாரிப்பாளரும், இயக்குநருமான இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராஜ் கவுஷல் - மந்திரா பேடி தம்பதியருக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர். இவரது திடீர் மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது திடீர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

mandira bedi Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe