தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, 'மண்டேலா' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சசிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 'மண்டேலா' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தேர்தல் நேரங்களில் நடைபெறும் அரசியல் கூத்துகளைக்கேலி செய்யும் வகையில் வெளியாகியுள்ள இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்று வருகிறது.