
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது 'மண்டேலா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சசிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒரே கட்டமாக முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர் இன்று (13.03.2021) வெளியாகவுள்ளதாகாகவும்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us