பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தண்னீர் பஞ்சமாக உள்ளது. குடிநீரை வழங்கிய ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டுவிட்டன. இதன்பொருட்டு தலைநகர் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

manchu manoj

குடிநீர் தேவையைச் சமாளிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து மக்கள் தண்ணீர் லாரிகளுக்காக காத்திருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்க்குமாறு தெலுங்கு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''தெலுங்கு மக்களுக்கு தேவைப்பட்டபோது உணவு, தண்ணீர், உறைவிடம், கொடுத்தது சென்னை. இப்போது நம்முடைய முறை. நாட்டின் ஆறாவது பெரிய நகரம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. நானும் என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் நான் வளர்ந்த பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க இருக்கிறோம். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கடந்த 2015ஆம் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்தபோது நடிகர் மஞ்சு மனோஜ் ஏராளமான உதவிகளைச் செய்தார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது