வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் நடிகர் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி காலை, 10.44 மணிக்கு வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிம்புவின் ஈஸ்வரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மாநாடு மோஷன் போஸ்டர் மூலம் டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார் சிம்பு.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/puly7E2-OU4.jpg?itok=-Eo2I0W5","video_url":"