man passed away while watching avatar 2 movie

உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் நேற்று (16.12.2022) இப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 124 மில்லியன் டாலரும் இந்தியாவில் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் 'அவதார் 2' படத்தை திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் பலருக்குஅதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரமாநிலம் காக்கி நாடா மாவட்டத்தில் பெத்தப்புறம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் லட்சுமிரெட்டி ஸ்ரீனு என்பவர் தனது தம்பி ராஜுவுடன் 'அவதார் 2' படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

Advertisment

அப்போது படம் பார்த்துக்கொண்டிருந்தபோதுலட்சுமிரெட்டி ஸ்ரீனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக லட்சுமிரெட்டி ஸ்ரீனுவை அவரது தம்பி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர். மேலும் படத்தைப் பார்த்து அதிக உற்சாகம் அடைந்ததன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனமருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் கடந்த 2010ஆம் ஆண்டு தைவான் நாட்டில் 'அவதார்' படத்தின் முதல் பாகத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஒருவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.