Advertisment

வலிமை படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர் கைது

Man arrested petrol bomb valimai release theater

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் இன்று (24.3.2022)வெளியாகியது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியதால்அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடினர்.

Advertisment

இதனிடையே கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கில்மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த சம்பத்தில் ஈடுபட்ட லட்சுமணன் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் நடத்தப்பட்ட விசாரணையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதைதட்டிக்கேட்டதால் இச்சம்பவத்தில்ஈடுபட்டதாகதெரியவந்துள்ளது.

Advertisment

ACTOR AJITHKUMAR valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe