Skip to main content

புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகை; மற்றொரு புதிய வகை நோயால் பாதிப்பு

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Mamta Mohandas suffering from new type of disease

 

மம்தா மோகன்தாஸ் மலையாளப் படங்களில் 2005 ஆம் ஆண்டில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ்மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தடையறத் தாக்க, குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் சிறந்த பாடகியும் கூட. அதற்காக பிலிம்பேர் விருதெல்லாம் பெற்றுள்ளார். 

 

திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஒப்புக்கொண்ட படங்களிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பிறகு குணமடைந்துவிட்டதாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், மீண்டும் லிட்டிகோ என்ற நிறமிழப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது நிறத்தை அழகை இழந்து வருவதாகவும் வருத்தத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

அதில், “அன்பே... நான் முன்பு எப்போதும் இல்லாதது போல் இப்போது உன்னை அணைத்துக் கொள்கிறேன். அது கண்டுபிடிக்கப்பட்டது தான், நான் நிறத்தை இழக்கிறேன்… உங்கள் முதல் கதிரை மூடுபனி வழியாக ஒளிர்வதைக் காண நான் தினமும் காலையில் உங்கள் முன் எழுகிறேன். உன்னிடம் உள்ள அனைத்தையும் கொடு.. ஏனெனில், உனது அருளால் இங்கும் என்றென்றும் நான் கடன்பட்டவளாக இருப்பேன்” என்றும், மேலும் மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில் ”எனது அன்றாட வாழ்வில் புதிய வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரு புதிய பாத்திரத்தில் படம்.. என் முதல் பள்ளி நாளில் செல்ல உள்ள கிட்டத்தட்ட குழந்தை போன்ற உற்சாகத்துடன்.. அனைத்தும் புத்தம் புதியது.. ஆனால், அதே பழைய நான் தான்..  காதலும் மற்றும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் இணைந்திருக்கிறது ” என்றும் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சிங்கப்பூரில் பரவும் உருமாறிய கொரோனா தொற்று' -அமைச்சர் மா.சு பேட்டி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Transformed corona infection spreading in Singapore' - Minister M. Su interview

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா என்றும்; ஆல்பா  என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.

Next Story

கொரோனாவை விடக் கொடிய நோய்; எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து நிபுணர்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

A UK expert has issued a warning about A disease more deadly than Corona

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு உயிர்களைப் பலி வாங்கும் நோய் ஒன்று பரவக் கூடும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.

 

இங்கிலாந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவின் தலைவராகப் பணியாற்றிய தொற்றுநோயியல் நிபுணர் கேட்பிங்காம் நேற்று தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார். அவர் அந்த பேட்டியில், “கொரோனாவை விட அதிகமான பலியை ‘நோய் எக்ஸ்’ என்ற நோய் ஏற்படுத்தும். உலக சுகாதார நிறுவனத்தால் ‘நோய் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் நோய் அடுத்த சர்வதேச தொற்று நோயாக இருக்கலாம். 

 

கடந்த 1918 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரையில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி உயிர்களைப் பலி வாங்கியது. இது முதலாம் போரில் இறந்தவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் 25 குடும்பங்கள் கொண்ட வைரஸ் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால், 10 லட்சத்துக்கும் மேலான கண்டுபிடிக்கப்படாத வைரஸ், மாறுபாடுகள் கொண்டவையாக இருக்கிறது. அவர் ஒரு மாறுபாட்டிலிருந்து இன்னொரு மாறுபாட்டிற்குத் தாவக்கூடிய திறன் கொண்டவை. 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் 2 கோடி பேரைப் பலி கொண்டவையாக இருந்தாலும், அதிலிருந்து பல பேரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால், நோய் எக்ஸ் என்ற வைரஸ் நோய் எபோலாவின் இறப்பு விகிதத்திற்குச் சமமானவை. எபோலா நோய் 67 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட வைரஸ் நோயாகும். எனவே, உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் ‘நோய் எக்ஸ்’ வைரஸால் விரைவில் பாதிக்கப்படலாம். இதைச் சமாளிக்கப் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.