Published on 10/08/2020 | Edited on 10/08/2020

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 15/08/1975ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்படி ரஜினிகாந்த் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து வரும் 15ஆம் தேதியோடு 45 வருடங்கள் நிறைவாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் ரஜினியின் 45 ஆண்டுகள் என்ற போஸ்டரை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்ற நிலையில் நடிகர் மம்மூட்டி ட்விட்டரில் ரஜினியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில்...
''5 தசாப்தங்கள்! 45 ஆண்டுகள்! ஒரு அடையாளம், தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் ஒரு சின்னம். எங்கள் அன்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் #45YearsOfRajinismCDP ஐ வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என கூறியுள்ளார்.